search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னாள் அமைச்சர்"

    • அகரம் ஃபவுண்டேஷன் மூலம் அவர் மேற்கொண்டு வரும் சமூகப்பணிகளுக்கு எனது பாராட்டினை தெரிவித்தேன்.
    • Good Vision Seva Trust மூலம் ஆற்றிவரும் சமூகப்பணிகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.

    திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நடிகர் சூர்யாவை முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் தற்செயலாக சந்தித்துள்ளார்.

    இதுதொடர்பாக மனோ தங்கராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    பதிவில் கூறியிருப்பதாவது:-

    நேற்று திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நடிகர் சூர்யாவைசந்தித்தேன். அவரது அகரம் ஃபவுண்டேஷன் மூலம் அவர் மேற்கொண்டு வரும் சமூகப்பணிகளுக்கு எனது பாராட்டினை தெரிவித்தேன்.

    அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில மொழிப்பயிற்சி அளிக்கும் எனது முயற்சி குறித்தும், நான் இளம் வயது முதல் Good Vision Seva Trust மூலம் ஆற்றிவரும் சமூகப்பணிகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.

    நடிகர் என்ற அடையாளத்தை கடந்து சமூக அக்கறை கொண்ட ஒரு நல்ல மனிதரை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'அண்ணா விருது' வழங்கி கவுரவித்தார்.
    • க.சுந்தரம் மறைவுக்கு தி.மு.க. நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    திமுக முன்னாள் அமைச்சர், பொன்னேரி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.,வும் அக்கட்சியின் ஆதிதிராவிட நலக் குழுவின் தலைவருமான க.சுந்தரம் (76) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

    திமுகவின் பட்டியலினத் தலைவர்களில் முக்கியமானவரான க.சுந்தரம், இரண்டு முறை திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.

    1989-ம் ஆண்டு திமுக ஆட்சியில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராகவும், 1996 - 2001 திமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

    2001ம் ஆண்டு இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார். திமுகவில் முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில் ஒன்றான துணை பொதுச் செயலாளராகவும் அவர் இருந்துள்ளார்.

    கடந்தாண்டு திமுக முப்பெரும் விழாவில் க.சுந்தரத்திற்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 'அண்ணா விருது' வழங்கி கவுரவித்தார். க.சுந்தரம் மறைவுக்கு தி.மு.க. நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், மறைந்த முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

    பிறகு, க.சுந்தரம் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.

    • கொலை மிரட்டல், போலி ஆவணங்கள் கொடுத்து மோசடி.
    • மோசடி செய்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் சிபிசிஐடி வழக்குப்பதிவு.

    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கொலை மிரட்டல், போலி ஆவணங்கள் கொடுத்து மோசடி செய்தல் உள்ளிட்ட பிரிவுகளில் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை மிரட்டி போலியான ஆவணம் கொடுத்து சொத்தை அபகரித்ததாக புகார் எழுந்தது.

    இந்த வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெயர் சேர்க்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது அவரது பெயரை சேர்த்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • பிரதமர் நரேந்திர மோடியையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் கிண்டல் செய்யும் வகையில் பதிவு.
    • இரண்டு சம்பவங்களையும் தொடர்புப்படுத்தி ஜெயக்குமார் பதிவு.

    அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் கிண்டல் செய்யும் வகையில் புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில், "கள்ளக்குறிச்சிக்கு போகவேயில்லையே எப்டி சமாளிச்சீங்க, ஸ்டாலின்..?

    மணிப்பூருக்கேப் போகாம நீங்க சமாளிச்ச மாதிரி தான், மோடிஜி" என பதிவிட்டுள்ளார்.

    மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்த கலரத்தில் ஏராளமானோர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இவ்வளவு கலவர சூழலிலும் மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் மோடி நேரில் செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

    இதேபோல், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்த நிலையில், அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் நேரில் சென்று நலம் விசாரித்தனர். ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் செல்லவில்லை.

    இவை இரண்டு சம்பவங்களையும் தொடர்புப்படுத்தி அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலாக வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

    • கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கி மாநில பாஜக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
    • எடியூரப்பாவின் மகன் பிஒய் ராகவேந்திராவை எதிர்த்து ஈஸ்வரப்பா போட்டி.

    கர்நாடக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    அதன்படி, கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கி மாநில பாஜக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    கட்சியில் இருந்து நீக்கிப் பாருங்கள் என சவால் விட்ட நிலையில், ஈஸ்வரப்பா அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    ஹாவேரி தொகுதியில் தனது மகனுக்கு லோக்சபா சீட் மறுக்கப்பட்டதால் ஈஸ்வரப்பா, ஷிமோகாவில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

    எடியூரப்பாவின் மகன் பிஒய் ராகவேந்திராவை எதிர்த்து ஈஸ்வரப்பா போட்டியிடுகிறார்.

    இதற்கிடையே, கட்சியின் மாநில தலைவரையும், எடியூரப்பாவையும் ஈஸ்வரப்பா கடுமையாக விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடையும் நிலையில் மீண்டும் நீட்டிப்பு.
    • புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்தப்பட்டார்.

    சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைதானார். இதன்பின் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடையும் நிலையில் மீண்டும் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் முன்பு செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.

    இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 32வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, நீதிமன்ற காவலை ஏப்ரல் 17ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • நெடுங்காடு தொகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று சந்திரபிரியங்கா வாக்கு சேகரித்தார்.
    • வாக்கு சேகரிப்பதை பாதியில் நிறுத்திவிட்டு, வீட்டுக்கு சென்றார்.

    திருநள்ளாறு:

    புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயத்தை ஆதரித்து நெடுங்காடு சட்டமன்ற தொகுதியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, வேட்பாளர் நமச்சிவாயம் ஆகியோருடன் அந்த தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான சந்திரபிரியங்கா திறந்த வாகனத்தில் வாக்கு சேகரித்தார். அப்போது வாகனத்தில் இருந்தபடி வாக்காளர்களுக்கும், தொண்டர்களுக்கும் பறக்கும் முத்தம் கொடுத்து உற்சாகப்படுத்தினார். பதிலுக்கு அவர்களும் முத்தங்களை பறக்கவிட அதை அவர் 'கேட்ச்' பிடித்து மகிழ்ந்தார். இது பிரசாரத்தில் கலகலப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் நேற்று நெடுங்காடு தொகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று சந்திரபிரியங்கா வாக்கு சேகரித்தார். அப்போது கடும் வெயில் காரணமாக அவருக்கு திடீரென சோர்வு ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் வாக்கு சேகரிப்பதை பாதியில் நிறுத்திவிட்டு, வீட்டுக்கு சென்றார். அங்கு உடல்நிலை மேலும் மோசம் அடைந்ததால் ஆதரவாளர்கள் அவரை காரில் அழைத்துச் சென்று காரைக்காலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    வெயில் தாக்கத்தால் சந்திரபிரியங்காவுக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டு உள்ளது என்றும், அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    • , "எம்.ஜி.ஆர். கழகம்' என்ற பெயரில் அரசியல் கட்சியை 1995-ம் ஆண்டு அக்டோபர் 17-ந்தேதி ஆர்.எம்.வீரப்பன் தொடங்கினார்.
    • ஆர்.எம். வீரப்பன் உடல் நலக்குறைவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 98- வது வயதில் மரணம் அடைந்து உள்ளார்.

    எம்ஜிஆர் கழகம் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் (ஆர்.எம்.வீ)1926 செப்டம்பர் - 9 ந்தேதி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கிவல்லத்திரா கோட்டையில் பிறந்தார்.

    இவர் பிரபல அரசியல்வாதி,மற்றும் திரைப்பட தயாரிப்பாளர். திரைக்கதை எழுத்தாளர் ஆவார் . ஆர்.எம்.வீரப்பன் 1956 மார்ச் 12 -ல் ராஜம்மாள் என்ற பெண்ணை திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்தார். அறிஞர் அண்ணா தலைமையில் தமிழ் முறைப்படி இந்த திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 மகள்கள் மற்றும் 3 மகன்கள் உள்ளனர்




    1977 முதல் 1996 வரை 5 முறை கேபினட் அமைச்சராக பணியாற்றி உள்ளார். சட்டப் பேரவையின் அவைத் தலைவராகவும், அ.தி.மு.க.வின் சட்டப் பேரவைத் தலைவராகவும் இருந்தார். 70 மற்றும் 80 -களில் அதிமுக அரசியலின் சாணக்கியர் என்றும் அழைக்கப்பட்டார்.

    1964 -ல் ஆர்.எம்.வீரப்பன் சத்யா மூவிஸ் என்ற பெயரில் "தெய்வ தாய்" திரைப்படம் தயாரித்தார். இப்படத்தில் எம்ஜிஆர்- சரோஜா தேவி ஜோடியாக நடித்தனர். அதைத் தொடர்ந்து நான் ஆணையிட்டால் , காவல்காரன் , கண்ணன் என் காதலன் , இதயக்கனி,  ரிக்ஷாக்காரன் ,காதல் பரிசு , காக்கி சட்டை , ராணுவ வீரன் , மூன்று முகம் , தங்க மகன் , ஒரு காவலன் , பணக்காரன் , மந்திரபுன்னகை , 




     


    புதியவானம் ,பாட்ஷா ,  உள்ளிட்ட படங்களை தயாரித்தார். இதில் ரஜினி நடித்த பாட்ஷா  படம் வசூல் சாதனை படைத்தது. 1971 தேர்தலில் அறிஞர் அண்ணாவின் திமுக சித்தாந்தத்தை பிரச்சாரம் செய்ய ரிக்ஷாக்காரன் திரைப்படம் பயன்படுத்தப்பட்டது.

    1972-ல் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து வெளியேறினார்.அப்போது  ரசிகர் மன்றங்களை அமைத்து அதிமுக என்ற புதிய கட்சியை தொடங்க எம்.ஜி.ஆருக்கு உதவினார்.

    மூத்த மகள் செல்வி, சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜனை திருமணம் செய்தார். 1984 -ல், எம்.ஜி.ஆர்., நோய்வாய்ப்பட்டிருந்த போது, கட்சி நடவடிக்கைகளை, தேர்தல் பிரசாரத்தை, ஆர்.எம்.வி., கவனித்தார்.



    1987-ல் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, கட்சி 2 அணிகளாக உடைந்தது, அங்கு அவர் தலைமையில் பெரிய அணி இருந்தது. வி.என்.ஜானகியை முதலமைச்சராக்க 98 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவைப் பெற்றார். அதன் பின் ஜெயலலிதாவுடன் சமரசம் செய்து, கட்சியின் இணைப் பொதுச் செயலாளராக இருந்தார்.

    'பாட்ஷா' பட வெள்ளி விழாவில் ரஜினிகாந்த், வெடிகுண்டு கலாச்சாரம் பற்றியும், ஆட்சியைப் பற்றியும் கருத்துக்கள் தெரிவித்தார். அப்போது ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தார். அவருடைய மந்திரி சபையில், வீரப்பன் உணவு துறை அமைச்சராக பதவி வகித்தார். இதன்பின் திடீரென்று அமைச்சர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார்.




    அதை தொடர்ந்து சில நாட்களில், அ.தி.மு.க.வில் இருந்தும் நீக்கப்பட்டார்.இதன் காரணமாக, "எம்.ஜி.ஆர். கழகம்' என்ற பெயரில் அரசியல் கட்சியை 1995-ம் ஆண்டு அக்டோபர் 17-ந்தேதி ஆர்.எம்.வீரப்பன் தொடங்கினார். தற்போது வரை அந்த கட்சியை அவர் நடத்தி வந்தார்.

    கடந்த சில நாட்களாக ஆர்.எம். வீரப்பன் உடல் நலக்குறைவுடன் காணப்பட்டார். அதை தொடர்ந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று தனது 98- வது வயதில் மரணம் அடைந்து உள்ளார்.

    • மக்கள் பணியில் மக்களுக்காக நல்ல திட்டங்களை எப்படி வகுக்க முடியும்.
    • பூமியில் உங்களை போன்ற மனித தன்மையற்ற நபர்களும் இருக்கிறார்கள்.

    கூவத்தூர் விவகாரத்தில் நடிகையை தொடர்புபடுத்தி அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு பேசியதற்கு கண்டனம் தெரிவித்து நடிகர் விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்த பெருத்த ஒரு முட்டாள் நம் திரையுலகைச் சேர்ந்த சக கலைஞரைப் பற்றி மிகவும் கேவலமாக பேசியதாகக் கேள்விப்பட்டேன்.

    அந்த பெரும் முட்டாள் ஒரு விளம்பரத்திற்காக இதைச் செய்து இருக்கிறார். என்பதற்க்காக நானும் அவருடைய பெயரை குறிப்பிட்டு அவரை விளம்பரபடுத்த விரும்பவில்லை. ஏனென்றால் நாங்கள் சக கலைஞர்களை மதிக்கும் நல்ல பண்புள்ளவர்கள்.

    மேலும், உங்களின் இதுபோன்ற மனசாட்சியற்று பேசிய சொற்களால் உங்கள் இல்லத்தில் உள்ள பெண்களின் மனநிலையை நீங்கள் அறிந்திருக்கவேண்டும். இந்த பூமியில் உங்களை போன்ற மனித தன்மையற்ற நபர்களும் இருக்கிறார்கள் என்பதை என்ணி வேதனை அடைகிறேன்.

    இப்படி கீழ் தனம் உள்ள உங்களால் அரசியலில் மக்கள் பணியில் மக்களுக்காக நல்ல திட்டங்களை எப்படி வகுக்க முடியும் என்பதே கேள்விக்குறிதான். இந்த பதிவு நடிகர் சங்க பொதுச்செயலாளர் என்ற முறையில் இல்லை, சக கலைஞனாகவும், பெண்களை இழிவுபடுத்தி பேசிய உங்களை சக மனிதனாகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.

    முன்குறிப்பு :- உங்களின் அறிவற்ற செயலினை புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். உங்களுக்கு ஒரு வேலை புரியவில்லை என்றால் உங்களை விட அதிகமாக படித்த அருகில் உள்ள இரண்டாம் வகுப்பு மாணவ, மாணவியர்களிடம் கேட்டு அறிந்துக்கொள்ளுங்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • முன்னாள் அமைச்சர்கள் ராஜலட்சுமி, தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
    • தெற்கு பகுதி செயலாளர் வக்கீல் முருகேஷ்வரன் தலைமையில் நடந்தது.

    நாகர்கோவில் :

    குமரி கிழக்கு மாவட்டம் நாகர்கோவில் மாநகர தெற்கு பகுதிக்குட்பட்ட பூத் கமிட்டி அமைக்கும் பூத் முகவர்கள் கூட்டம் தெற்கு பகுதி செயலாளர் வக்கீல் முருகேஷ்வரன் தலைமையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க மகளிர் அணி இணை செயலாளருமான ராஜலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு பூத்கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை வழங்கினர். மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், துணை செயலாளர் சுகுமாரன், மாநில நிர்வாகிகள் கிருஷ்ணதாஸ், வக்கீல் சிவ செல்வராஜன், சாந்தினி பகவதியப்பன், பகுதி செயலாளர்கள் வக்கீல் ஜெயகோபால், ஜெவின் விசு, ஸ்ரீலிஜா, வட்ட செயலாளர்கள் ராஜாராம், ஜெயராஜ், முருகன், பாலசுந்தர், ராஜகோபால், சதீஷ், ராம்ஜி ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • முதல்வர் குறித்து அவதூறு பேச்சு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மீது வழக்குபதியப்பட்டது.
    • சப்-இன்ஸபெக்டர் நாகைய்யா கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள உச்சிப்புளியில் நடப்பாண்டு ஜன.22-ந் தேதி அ.தி.மு.க சார்பில் எம்.ஜி.ஆர். 106-வது பிறந்தநாள் விழா நடந்தது. அதில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் உச்சிப்புளி போலீஸ் நிலையத்தில் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு சப்-இன்ஸபெக்டர் நாகைய்யா கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    • இந்த மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகளில் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
    • மாநகர நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள், கட்சியினர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ஓசூர்,

    அ.தி.மு.க. சார்பில் மதுரையில் வருகிற 20-ஆம் தேதி எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகளில் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், மதுரை மாநாட்டிற்கு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக, முன்னாள் அமைச்சரும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளருமான பாலகிருஷ்ண ரெட்டி, கட்சி தொண்டர்களுடன், ஆட்டோக்களில் மாநாட்டு வரவேற்பு ஸ்டிக்கர் மற்றும் பேனர்களை ஒட்டினார். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஊக்கப் பரிசும் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன், ஓசூர் மாநகர பகுதி செயலாளர்கள் அசோகா, பி.ஆர். வாசுதேவன், ராஜி, மஞ்சுநாத், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜே.எம்.சீனிவாசன் மற்றும் மாவட்ட, மாநகர நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள், கட்சியினர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ×